யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, மாவிட்டபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை (16) மதியம் 3.30 மணியளவில் பட்டா வாகனமும் துவிச்சக்கர வண்டியும் மோதியே விபத்து சம்பவித்துள்ளது.
மாவைகலட்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதான் தா.தினேஷ் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பட்டா வாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக காங்கேசன்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1