வெல்லம்பிட்டிய, லாங்சியாவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த பெண் ஒருவர், வீட்டின் உரிமையாளரான பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 61 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் மேற்படி சந்தேக நபர் எஜமானி பெண்ணை கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1