27 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இலங்கை

மீண்டும் இளைஞர்கள் போராடக்கூடும்: சரவணபவன்!

தமிழர்களுக்கான நிரந்தர தீர்வினை வழங்காது இந்த அரசு காலம் தாமதித்தால் மீண்டும் இளைஞர்கள் போராட கூடும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.

நேற்று (14) வட்டுக்கோட்டை அராலி பகுதியில் பொதுமக்களுக்கு பொங்கல் பொதியினை வழங்கி வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பலதடவைகள் யாழ்ப்பாணத்திற்கு அனைத்து ஜனாதிபதிகளும் வந்து சென்று விட்டார்கள். நல்லாட்சி அரசாங்கத்தின் காலம் முதல் காணிகள் விடுவிப்பு அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக உடனடியாக தீர்வு தருகின்றோம் என சொல்லத் தொடங்கினார்கள். நல்லாட்சி காலத்தில் ஜனாதிபதியாக வந்த பொழுது நாங்கள் தமிழர்களினுடைய நிரந்தர தீர்வுகள் உட்பட தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் அனைத்தும் உடனடியாக தீர்க்கப்படும் என்று நமக்கு வாக்குறுதி அளித்தார்கள். இப்பொழுது ஜனாதிபதியாக இருக்கக்கூடிய ரணில் விக்கிரமசிங்க அந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக செயல்பட்டார்.

ஒன்றை மட்டும் நாளை யாழ்ப்பாணத்திற்கு பொங்கல் நிகழ்வுக்காக வருகை தருகின்ற ஜனாதிபதி விளங்க வேண்டும். நாங்கள் பல தடவைகள் இது தொடர்பாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்டு விட்டோம். எங்களுடைய அதிகார பகிர்வு அதிகார பங்கீடு தொடர்பாக நாங்கள் பல வருடங்களாக கதைத்துக் கொண்டிருக்கின்றோம். இந்தக் கதைகள் பழங்கதைகளாகி கிட்டத்தட்ட 70, 75 வருடங்கள் ஆகிவிட்டது .

அதி உத்தம ஜனாதிபதி அவர்களே எவ்வளவு காலம் எங்கள் தமிழ் மக்களை நீங்கள் ஏமாற்ற முடியும் எங்களுடைய தமிழ் இளைஞர்கள் வெகுண்டு எழுந்தார்கள் உங்களுடைய ஏமாற்று வித்தைகளை கையாண்டு நீங்கள் பல சந்தர்ப்பங்களை பாவித்து மௌனிக்க பண்ணினீர்கள். மீண்டும் நீங்கள் நாளை வந்து என்ன புது கதை சொல்லப் போகின்றீர்கள் என்று பார்க்கத்தான் போகின்றோம் எங்களுடைய தமிழரசு கட்சியின் தலைவர் கூறியிருக்கின்றார் இனிமேல் தவணைகள் தேவையில்லை தீர்வினை உடனடியாக வழங்குங்கள் என்று எவ்வளவு காலம் தான் தவணை கேட்பீர்கள்.

எதிர்வருகின்ற இரண்டு வருடத்தையும் இந்த ஜனாதிபதி எப்படியாவது தமிழர்களை ஏமாற்றி கொண்டு நடத்தி விடுவார் தமிழர்களும் ஏதோ ஒரு விதப்பட்டு ஏமாற்றத்திற்குள் அகப்பட்டு விடுவோம் ஆனால் தமிழர்கள் ஏமாற்றப்படக்கூடாது என்பதற்காக ஒருவர் 30 வருடங்களாக தமிழ் மக்களினுடைய உரிமையை மீட்டெடுப்பதற்காக போராடினார். அதனுடன் இணைந்து எத்தனையோ மக்கள் அதனுடன் இணைந்து எத்தனை மக்கள் உயிரை நீத்திருக்கின்றார்கள். அப்பொழுது போராட்டம் தொடங்குகின்ற பொழுது நாங்கள் இளைஞர்கள் இப்பொழுது எங்கள் பிள்ளைகளாக இருக்கக்கூடிய இளைஞர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்குவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

ஒன்றை இந்த ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும் பூகோள அரசியல் ஒரு பக்கம் இருக்கின்றது நாட்டுப் பிரச்சனை ஒரு பக்கம் இழுக்கின்றது இதற்குள் தாங்கள் சகல இடங்களையும் பிடிக்க வேண்டும் என சிங்கள கட்சிகள் முனைப்போடு செயல்படுகின்றன.

நாளைய தினம் ஜனாதிபதி தேசிய பொங்கல் விழாவிற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்ற பொழுது அவருடைய வருகையை பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட்ட இளைஞர்கள் எதிர்க்க இருக்கின்றார்கள் இது அவருக்கு ஒரு செய்தி யை அவருக்கு கொடுக்கின்றது இவ்வாறு ஜே.ஆர். ஜெயவர்த்தனமும் யாழுக்கு வருகை தந்து சென்ற நிலையில் பாரிய எதிர்ப்பலையை சந்தித்து இருந்தார். ஆகவே இந்த ஜனாதிபதி தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளை தீர்ப்பதில் நேரம் கடத்துவதை நிறுத்தி பிரச்சனைகளை பிரச்சனைகளாக கருதி அதனை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

வடமாகாணத்தில் பல நாடுகள் தற்பொழுது உள்ளே வர தொடங்கியுள்ளன. அவர்களும் தங்களுக்கான பிரதிநிதிகளை இட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள் இந்தியா சீனாவினை தாண்டி பிற நாடுகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. நிச்சயமாக அவர்களுடைய புலனாய்வு இது தொடர்பாக அறிந்து கொடுத்திருக்கும். உங்களுக்கு ஐந்து வருட கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது ஆனால் அந்த காலத்தில் நீங்கள் இதனை செய்யவில்லை தற்பொழுது மீண்டும் உங்களுக்கு சந்தர்ப்பம் வந்திருக்கிறது காலத்தை நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

ஒரு காலத்தில் சிங்கள அரசியல்வாதிகள் ஏமாற்று வித்தைக்காரர்கள் என்ற பெயர் உலகம் பூராகவும் அவ்வாறு ஏமாற்றி வித்தை காட்டியவர்களை இந்த சில நாடுகள் தங்களுக்கு தங்களுடைய ஆட்புல எல்லைக்குள் வருவதற்கு தடைகளை விதித்து வருகின்றன. சிங்கள அரசியல்வாதிகள் இதனை நன்றாக உணர வேண்டும் .

இந்த முறையும் ஜெனிவா அமர்வு இடம்பெற காத்திருக்கின்றது .இந்த அமர்வில் எங்களுடைய பிரச்சனைகள் எவ்வளவு தூரத்திற்கு இம்முறை செல்வாக்கு செலுத்தும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இருப்பினும் அடுத்த முறை அது திரும்ப எடுக்கப்படுகின்ற தருணத்தில் உலகளாவியரீதியில் நீங்கள் பாரிய பிரச்சினைகளுக்குள் தள்ளப்பட இருக்கின்றீர்கள். உங்களுக்கு நிச்சயமாக அது தெரியும் நாட்டினுடைய பொருளாதாரமும் அகல பாதாளத்திற்குள் போய் கொண்டு இருப்பது அதற்குரிய காரணம் நீங்கள் அறிவீர்கள்

எத்தனையோ லட்சக்கணத்திற்கு மேற்பட்ட எங்களுடைய புலம்பெயர் தேசத்தவர்கள் உலகளாவியரீதியில் பரந்துபட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் நம்பிக்கை ஊட்டினால் தமிழ் மக்களுக்கு உரிய உரிமையையும் தமிழர்களுக்குரிய அதிகார பகிர்வையும் பெற்றுக் கொடுத்தால் புலம்பெயர் மக்களாகவே வீழ்ச்சியான பொருளாதாரத்தை கட்டி எழுப்புவார்கள் .உங்களுக்கு தேவையான அந்நிய செலாவணி வந்து சேரும் இதனையெல்லாம் நீங்கள் கவனத்தில் எடுங்கள் உங்களுடைய குரோத மனப்பான்மையை கைவிடுங்கள் சிங்கள மக்களுக்கு இந்த குரோத மனப்பான்மையை விதைத்தவர்கள் நீங்கள் சிங்கள மக்களை எங்களுக்கு எதிராக திருப்பி விட்டவர்கள் நீங்கள் நீங்கள் தான் சிங்களம் மட்டும் சட்டத்தை கொண்டு வந்தவர்கள்.

இதனையெல்லாம் நீங்கள் உடனடியாக தீர்த்து வைக்கின்ற தருணத்தில் எங்களுடைய புலம்பெயர் மக்களால் இந்த நாட்டிற்குரிய தீர்வு தீர்க்கமாக கிடைக்கப்பெறும் நீங்கள் சிந்தித்துச் செய்ய வேண்டியவற்றை செய்யுங்கள் இல்லை தமிழர்களுக்கு தீர்வு கொடுக்கக் கூடாது எல்லோரும் பட்டிணியில் இருந்து சாவோம் நாடு எவ்வாறு கெட்டும் போகட்டும் என்று உங்களுடன் சேர்ந்து இருப்பவர்களுக்கும் இருக்கின்றது உங்களுடைய பதவியை தக்க வைப்பதற்காக நீங்கள் அதற்கும் சேர்த்து தலையை அசைத்துக் கொண்டு போவது ஒன்றும் நாட்டிற்கும் மிகப்பெரிய கேட்டை விளைவிக்கும் ஆகவே தமிழர்களுக்குரிய தீர்வினை விரைந்து வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மியன்மார் அகதிகள் 12 பேர் விடுதலை

east tamil

தரம் 5 புலமைப்பரிசில் விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்!

Pagetamil

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்த்தன காலமானார்

Pagetamil

ஜேவிபி ஆட்சியில் அரசியல் செல்வாக்கில் நடந்த கைது: முச்சக்கர வண்டி சாரதிகள் எதிர்ப்பு போராட்டம்!

Pagetamil

யாழில் ஒருவரை கட்டிவைத்து தாக்கியவர்களுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment