கண்டியில் 17 வயதுடைய இளைஞர் ஒருவர் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 13ஆம் திகதி மன்னார் பேசாலையைச் சேர்ந்த இளைஞன் 15 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நகரில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்துகொண்டபோது, அவரது அடையாளத்தை உறுதிப்படுத்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் அடையாள அட்டையைக் கேட்டுள்ளனர். ஆனால், அப்போது அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. அவரை சோதனையிட்டபோது அவரது கால்சட்டை பாக்கெட்டில் ஐஸ் போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
கமினாத் கிமில்சன் என்ற இளைஞன் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஜனவரி 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1