25.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
கிழக்கு

மட்டக்களப்பில் பேருந்து விபத்து!

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி ஊறணி பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பயணித்த பேருந்து இன்று (13) வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு ஊறணி சந்திக்கு அருகில் வேககக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நின்ற பனைமரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா

east tamil

செந்திலின் ஊழலும் அருணின் மௌனமும்

east tamil

பெண்களுக்கு அரச அச்சுறுத்தல் – பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள்

east tamil

காரைதீவு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 8வது நபரின் சடலமும் மீட்பு!

Pagetamil

உழவு இயந்திரம் விபத்து – மதரசா அதிபர் உள்ளிட்ட 4 பேர் கைது!

Pagetamil

Leave a Comment