முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா!

Date:

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 374 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களை எட்டி இருந்தது. கப்டன் ஷனக அபாரமாக விளையாடி சதம் விளாசி இருந்தார்.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த ரி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இலங்கை அணி இழந்தது. தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணியுடன் விளையாடி வருகிறது. கவுகாத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டி தொடரின் முதல் போட்டி.

இதில் ரொஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் ஆடி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்தது.

கில் 70, ரோகித் 83, கோலி 113 ஓட்டங்களையும் பெற்றனர்.

374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இலங்கை அணி விரட்டியது.

அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை ஒரு பக்கம் இழந்தது. இருந்தாலும் கப்டன் ஷனகா, தொடக்க ஆட்டக்காரர் நிசங்கா (72 ரன்கள்), தனஞ்சய டி சில்வா (47 ரன்கள்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். ஷனக இறுதி வரை அவுட்டாகாமல் 88 பந்துகளில் 108 ரன்கள் குவித்திருந்தார். 9வது விக்கெட்டுக்கு ரஜித உடன் 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார் அவர்.

50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 306 ரன்களை எட்டி இருந்தது. அதன் மூலம் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீதான கடற்படை முற்றுகை: அமெரிக்காவின் புதிய அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணைக்குக் கிழக்கே உள்ள ஓமான் வளைகுடா மற்றும் அரபிக்கடலில் அமெரிக்க...

‘இந்த போப் எனக்கு வேண்டாம்’: அடம் பிடிக்கும் ட்ரம்ப்!

ஈரானில் அமெரிக்கா தலைமையிலான போரை போப்பாண்டவர் விமர்சித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி...

யாழில் இளைஞன் கொலை: காதல் விவகாரத்தால் விபரீதம்?

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரத்தில் இளைஞர் ஒருவர் நேற்றிரவு கூரிய ஆயுதத்தால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்