பதான் ட்ரெய்லர்

Date:

இந்திய சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் உருவாகி உள்ள ‘பதான்’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. நேற்று காலை 11 மணி அளவில் இந்த ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. ட்ரெய்லர் வெளியிடப்பட்ட 19 நிமிடங்களில் 10 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. இதன் தமிழ்ப் பதிப்பை நடிகர் விஜய் வெளியிட்டிருந்தார்.

ஷாருக்கான் உடன் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

வரும் 25ஆம் திகதி இந்தப் படம் திரைக்கு வர உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், படத்தின் ட்ரெய்லர் இப்போது வெளியாகி உள்ளது. ஏற்கெனவே இந்த படத்தின் சிங்கிள் பாடல்கள் சில வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதித்ய சோப்ரா இந்தப் படத்தை தயாரித்துள்ளார். விஷால் – சேகர் இணைந்து படத்திற்கான இசையை அமைத்துள்ளனர். இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இந்தப் படம் வெளியாக உள்ளது. பாலிவுட் சினிமா உலகில் அண்மைய காலமாகவே முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு வரவேற்பு கிடைக்காமல் உள்ளது. அதோடு சமூக வலைதளங்களில் அந்தப் படங்களை புறக்கணிப்பது தொடர்பான முழக்கங்களும் ஒலிக்கின்றன. இருந்தாலும் ஷாருக்கான் இந்தப் படத்துக்காக கொடுத்துள்ள உழைப்பை ரசிகர்கள் போற்றி வருகின்றனர்.

அதிரடி அக்‌ஷன் காட்சிகளில் அவர் கவனம் ஈர்க்கிறார். அதைப் பார்த்த பூரிப்பில், ‘நீங்கள் பாலிவுட்டை புறக்கணிக்கலாம். ஆனால், ஒருபோதும் ஷாருக்கானை புறக்கணிக்க முடியாது’ என அவரது புகழை ரசிகர்கள் பாடி வருகின்றனர். அதன் வெளிப்பாடுதான் ட்ரெய்லர் வெளியான 19 நிமிடங்களில் 1 மில்லியன் பார்வைகளை கடக்க காரணம். 1 மணி நேரத்தில் சுமார் 30 லட்சம் பார்வைகளை இது எட்டியுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீதான கடற்படை முற்றுகை: அமெரிக்காவின் புதிய அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணைக்குக் கிழக்கே உள்ள ஓமான் வளைகுடா மற்றும் அரபிக்கடலில் அமெரிக்க...

‘இந்த போப் எனக்கு வேண்டாம்’: அடம் பிடிக்கும் ட்ரம்ப்!

ஈரானில் அமெரிக்கா தலைமையிலான போரை போப்பாண்டவர் விமர்சித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி...

யாழில் இளைஞன் கொலை: காதல் விவகாரத்தால் விபரீதம்?

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரத்தில் இளைஞர் ஒருவர் நேற்றிரவு கூரிய ஆயுதத்தால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்