கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று மாலை இந்த விபத்து சம்பவித்துள்ளது.
கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த அரச போக்குவரத்து பேருந்து, வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்தவர் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் பளை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
பேருந்தின் சாரதி பேருந்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தில் கோவில்காடு இத்தாவில் பகுதியைச் சேர்ந்த முத்தையா கந்தசாமி (59) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


