சல்மான் கானை காதலித்த 8 ஆண்டுகள் எனது வாழ்க்கையில் நரகமான காலம் முன்னாள் காதலி சோமி அலி போட்டு தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். மான் வேட்டை முதல் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி சிறைக்கு சென்று திரும்பிய போதும், சல்மான் கான் ரசிகர்களை அவரை ஒரு போதும் விட்டுக் கொடுக்காமல் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.
சல்மான் கான் ஐஸ்வர்யா ராய் தொடங்கி தமிழில் இருந்து சென்ற அசின் வரை சல்மான் கானின் காதல் லிஸ்ட்டில் பல நடிகைகள் இடம்பெற்றுள்ளனர். நடிகை சோமி அலி, சல்மான் கானின் முன்னாள் காதலி ஆவார்.
இவர் தற்போது பலாத்காரம் மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். சோமி அலி, சல்மான் கானால் தான் அனுபவித்த குடும்ப வன்முறை குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவார். பின்னர் அந்த பதிவுகளை நீக்கி விடுவார்.
ஆனால் தற்போது அந்த பதிவுகளை நீக்கியதற்கான காரணங்களை கூறி, “அவருடன் கழித்த எட்டு வருடங்கள் எனது முழு வாழ்க்கையிலும் நரகமான காலம் என்று கூறியுள்ளார்.
சல்மான் கானுடன் ‘யார் கதர், தீஸ்ரா கவுன், சுப்’ போன்ற பாலிவுட் படங்களில் நடித்த நடிகை சோமி அலி, சூப்பர் ஸ்டார் சல்மான் கானை எட்டு வருடங்களாக காதலித்து வந்தார். சோமி அலிக்கு 16 வயதில் சல்மான் கான் மீது காதல் ஏற்பட்டது. அவரை திருமணம் செய்து கொள்வதற்காக அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தார். அவருடன் இணைந்து நடித்து அவருடன் ஒரு உறவை வளர்த்துக் கொண்டார்.
ஆனால் கடந்த காலங்களில் பல நேர்காணல்களில், சல்மான் தன்னை ஏமாற்றிவிட்டு பிரிந்ததை வெளிப்படுத்தினார். மேலும் சல்மானின் தாயாருடன் தனக்கு நல்ல உறவு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் அவர் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில், சல்மானுடன் கழித்த 8 ஆண்டுகள் தனது முழு வாழ்க்கையிலும் மோசமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.
சல்மான் தன்னை ‘அசிங்கமானவள்’ என்று கூறி சிறுமைப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டகிராம் பதிவில் கூறி இருப்பதாவது:- இது எந்த வகையிலும் பிரேக்கிங் நியூஸ் அல்ல. 90களின் முற்பகுதியில் இருந்து 1999 வரை ஏதேனும் திரைப்பட இதழைப் புரட்டிப் பாருங்கள், சல்மான் கான் சோமி அலியை உடல்ரீதியாக துன்புறுத்திய பல கதைகளைக் காணலாம். ஆனால் இந்த விஷயத்தை இப்போது சொல்கிறேன் என்று எல்லோரும் கேள்வி எழுப்புகிறார்கள். சிறுவயதில் துஷ்பிரயோகத்திற்கு ஆளான ஒருவர் என்ற முறையில், நான் அதைப் பற்றி பேசுவதை நிறுத்தவே இல்லை. ஆனால் அதை இப்போது குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
இது எண்ணற்ற குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களின் வாழ்க்கை மற்றும் இறப்பு பிரச்சினை குறித்தது. அவருடன் கழித்த எட்டு வருடங்கள் எனது முழு வாழ்க்கையிலும் மிக மோசமான ஆண்டுகள். அவர் என்னை அசிங்கமானவள், முட்டாள் மற்றும் ஊமை என்று தொடர்ந்து குறைத்து மதிப்பிடுவார்.
“பல ஆண்டுகளாக அவர் என்னை தனது காதலியாக பொதுவில் ஒப்புக் கொள்ள மாட்டார், கடைசியாக அவர் அதை செய்தபோது, அவர் தனது நண்பர்களின் முன்னிலையில் என்னை அவமானப்படுத்துவார், இடைவிடாது என்னைத் திட்டுவார். அவர் என்னை நடத்துவதைக் கருத்தில் கொண்டு, நான் அதைச் சொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. என்னைக் கவனித்துக் கொள்ளும் மற்றும் என்னை நேசிக்கும் ஒருவரைத் தேடுவது என்பது எனது ஆசை.
இந்த ஆண்கள் வெறுமனே பயன்படுத்துகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. நானும் ஒரு ஆண், ஆண்களால் மட்டுமே பெண்களை ஏமாற்ற முடியும் என்று கூறி என்னை அடிக்கும் தைரியம் அவருக்கு இருந்தது. வாய்மொழி, பாலியல் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் ஆகியவற்றின் அடிப்படையில் நான் அதை மோசமாக அனுபவித்தேன் என கூறினார்.
சோமி அலிக்குப் பிறகு, சல்மான் கான் சங்கீதா பிஜ்லானி, கத்ரீனா கைப் மற்றும் ஐஸ்வர்யா ராய் போன்ற நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டார்.