26.3 C
Jaffna
December 30, 2024
Pagetamil
இலங்கை

யாழ்- இந்தியா கப்பல் சேவை கலந்துரையாடல்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பொருட்கள் கொண்டு வருவது தொடர்பில் கப்பல் நிறுவனத்துக்கும் யாழ் மாவட்ட வணிகர் கழகத்திற்கு இடையிலான சந்திப்பு ஒன்று இடம் பெற்றது.

யாழ் மாவட்ட வணிகர் கழகத்தின் தலைவர் ஆர்.ஜெயசேகரன் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பு இடம் பெற்றது.

இரு தொடர்பில் ஆர்.ஜெயசேகரன் கருத்து தெரிவிக்கையில்-

ஏற்கனவே நாங்கள் திட்டமிட்டதன் அடிப்படையில் அந்த சந்திப்பு இன்றைய தினம் இடம் பெற்றது. பெருந்தொகையான வர்த்தகர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு தமது ஆர்வங்களை வெளிப்படுத்தினர்.

காங்கேசன் துறையிலிருந்து காரைக்காலுக்கான இந்த கப்பல் சேவையில் பொருட்களை ஏற்றுமதி செய்தல் மற்றும் இறக்குமதி செய்தல் என்பன இடம் பெற உள்ளன.
இதன்போது பல்வேறு பிரச்சனைகள் தொடர்பிலும் அதன் போது ஏற்றுமதி இறக்குமதி விரைவில் என்னென்ன பொருட்களை ஏற்றுமதி செய்தால் என்னென்ன பொருட்களை இறக்குமதி செய்தல் என்பது தொடர்பிலும் வர்த்தகர்களினால் கலந்த ஆலோசிக்கப்பட்டது.

கப்பல் கம்பெனியுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைக்கு அமைவாக காங்கேசன்துறை துறைமுகத்தில் ஒரு கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.

இந்த கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வணிகர் கழகத்தில் இடம் பெற்றது.

காங்கேசன் துறை துறைமுகத்திற்கு அண்மையில் உள்ள காரைக்கால் துறைமுகத்தின் ஊடாக இந்த பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி இடம்பெற உள்ளது.

நான்கு மணித்தியாலத்தில் இந்த பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி இடம்பெறும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புதிய இராணுவத்தளபதி நியமனம்!

Pagetamil

புதிய கடற்படை தளபதி நியமனம்

Pagetamil

யாழில் போராட்டம்

Pagetamil

இணைய மிரட்டல் சம்பவம் இரு மாணவர்கள் கைது

east tamil

“தனியார் வகுப்புகள் இல்லாமல் சிறந்த கல்வி பெற இயலும்” – ஜோசப் ஸ்டாலின் கருத்து

east tamil

Leave a Comment