இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்!

Date:

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று காலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஆரம்பமானது.

களுவாஞ்சிகுடியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியது.

இக்கூட்டத்தில் கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம், சிரேஸ்ட உபதலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், நிருவாகக் குழு, மத்தியகுழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த கூட்டத்தின் ஆரம்பத்தில் கட்சிக்கொடி தமிழரசுக்கட்சியின் தலைவரினால் ஏற்றப்பட்டதை தொடர்ந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் இராசமாணிக்கம் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பமானது. இன்றைய கூட்டத்தில் கட்சியின் பல முக்கிய விடயங்கள், உள்ளூராட்சித் தேர்தல் விடயங்கள், பங்காளிக் கட்சிகளின் விடயதானங்கள் உள்ளிட்டவை கலந்துரையாடப்படவுள்ளதுடன், பல முக்கிய தீர்மானங்களும் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் எதிர்பார்க்கப்படுகின்றது.

spot_imgspot_img

More like this
Related

63 வயது அவுஸ்திரேலிய அன்ரியுடன் உடலுறவு கொள்ள கடிதம் கொடுத்த 3 பேர் கைது!

உனவட்டுனவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரை,...

பொதுவேட்பாளராகும்படி மைத்திரிக்கு முதல் என்னையே கேட்டனர்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக, 2015...

பொலன்னறுவையில் நேற்று அதிக வெப்பம்

பொலன்னருவையில் நேற்று (செப்டம்பர் 2) நாட்டின் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 37.9°C...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்