25.8 C
Jaffna
December 26, 2024
Pagetamil
உலகம்

ஆப்கானிஸ்தானில் 25 பொதுமக்களை கொன்றேன்; அதில் கவலையில்லை: ஹாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இளவரசர் ஹாரி, அப்பாச்சி ஹெலிகாப்டர் பைலட்டாக இருந்த காலத்தில் ஆப்கானிஸ்தானில் 25 பேரைக் கொன்றதாக ஒப்புக்கொண்டதாக, விரைவில் வெளியிடப்படும் சுயசரிதையை மேற்கோள்காட்டி பிரிட்டிஷ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஹாரி இராணுவ சேவையில் ஈடுபட்ட போது, 2007-2008 வரையில் ஆப்கானில் வான்வழித் தாக்குதல்களில்  விமானக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றினார், பின்னர் 2012-2013 க்கு இடையில் தாக்குதல் ஹெலிகொப்டரை செலுத்தினார்.

38 வயதான அவர் அடுத்த வாரம் ஸ்பேர் என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட உள்ளார். அதில் அவர் ஒரு பைலட்டாக ஆறு பயணங்களை மேற்கொண்டதாக வெளிப்படுத்தினார். அது அவரை “மனித உயிர்களை எடுக்க” வழிவகுத்தது என்று டெய்லி டெலிகிராப் தெரிவித்துள்ளது.

அவ்வாறு செய்வதில் தனக்கு பெருமையும் இல்லை, வெட்கமும் இல்லை என்றார் ஹாரி. ஒரு பலகையில் இருந்து “செஸ் காய்களை” அகற்றுவது போல் இலக்குகளை நீக்குவது என்றும் அவர் விவரித்தார்.

“எனது எண் 25. இது என்னை திருப்தியுடன் நிரப்பும் எண் அல்ல, ஆனால் அது என்னை சங்கடப்படுத்தவும் இல்லை” என்று அவர் எழுதினார்.

அவரது அப்பாச்சி ஹெலிகொப்டரில் பொருத்தப்பட்ட வீடியோ கமராக்கள், அவரது பணிகளை மதிப்பீடு செய்ய உதவியது – மேலும் அவர் எத்தனை பேரைக் கொன்றார் என்பதை உறுதியாகக் கண்டறிய முடிந்தது.

அமெரிக்காவில் 9/11 தாக்குதல்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்ததன் காரணமாக இளவரசர் தனது செயல்களுக்கான நியாயத்தை விளக்கினார்.

பொறுப்புள்ளவர்களும் அவர்களின் அனுதாபிகளும் “மனிதகுலத்தின் எதிரிகள்” என்றும் அவர்களுடன் சண்டையிடுவது மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்திற்கு பழிவாங்கும் செயல் என்றும் அவர் கூறினார்.

அமெரிக்கா தலைமையிலான வெளிநாட்டுப் படைகள் 20 ஆண்டுகால இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பிறகு ஓகஸ்ட் 2021 இல் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறின. இந்தக்காலகட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். நேட்டோ படைகளின் மீது போர்க்குற்றமும் சுமத்தப்பட்டது.

ஜனவரி 10 ஆம் திகதி வெளியிடப்படவுள்ள ஹாரியின் நினைவுக் குறிப்பு புத்தகத்தில், ஹாரி தனது சேவையின் போது கொன்ற தலிபான் போராளிகளின் எண்ணிக்கையைப் பற்றி முதல் முறையாகப் பேசினார்.

ஹாரியின் நினைவுக் குறிப்பின் நகலைப் பெற்ற த கார்டியன் வெளியிட்ட செய்தியின் படி, 2019 ஆம் ஆண்டு ஹாரியின் மனைவி மேகனைப் பற்றிய வாதத்தின் போது தனது மூத்த சகோதரரும் அரியணையின் வாரிசுமான இளவரசர் வில்லியம் அவரை தரையில் வீழ்த்தி தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

மன்னன் சார்லஸ், தனது இரண்டாவது மனைவியான கமிலாவை- இப்போது ராணி- மனைவியாக திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று தானும், வில்லியமும்  தந்தையிடம் கெஞ்சியதையும், அவர் ஒரு இளைஞனாக கோகோயின் உட்கொண்டதையும் ஹாரி வெளிப்படுத்தினார்.

அவர் பிரிட்டிஷ் இராணுவத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றினார். கப்டன் பதவிக்கு உயர்ந்தார். அவர் இராணுவத்தில் இருந்த காலத்தை தனது வளர்ச்சிக்கான ஆண்டுகள் என்று விவரித்தார்.

ஹாரியின் இராணுவ சேவையின் காரணமாக பாதுகாப்பு கவலைகள் உள்ளன, அந்த நேரத்தில் அவர் கொன்றவர்களின் எண்ணிக்கையை அவர் வெளிப்படுத்திய பிறகு அவை அதிகரிக்கக்கூடும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஆப்கானிஸ்தானுக்குள் திடீர் வான் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

உகண்டாவை உலுக்கும் டிங்கா டிங்கா வைரஸ்: இந்த வைரஸ் தொற்றினால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டேயிருப்பீர்கள்!

Pagetamil

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

east tamil

Leave a Comment