யாழ் மாநகரசபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு: வெளியானது வர்த்தமானி!

Date:

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகியது.

யாழ் மாநகரசபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் 2வது முறையாகவும் நிறைவேற்றப்பட முடியாத சூழல் ஏற்பட்ட போது, முதல்வர் வி.மணிவண்ணன் பதவியை துறந்தார்.

இதையடுத்து, குழப்பமாக சூழல் ஏற்பட்டது.

உள்ளூராட்சி விதிகளின் அடிப்படையில் மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் அறிவித்தார். யாழ் மாநகரசபையின் எதிர்காலம் குறித்து சட்டமா அதிபரிடம் வினவவுள்ளதாக தெரிவித்தார்.

எனினும், மீண்டும் முதல்வர் தெரிவு நடத்தப்படலாமென்றும் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், மீண்டும் முதல்வர் தெரிவு நடைபெறவுள்ளதாக வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார். அது குறித்த வர்த்தமானி அறிவித்தலும் இன்று வெளியாகியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

செவ்வாய் ஈரானுடன் பேச்சு- ட்ரம்ப்

ஈரான் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தோஹாவில் நடைபெறும் என்றும், இதில்...

வடக்கு ஆளுனரின் முறையற்ற நடவடிக்கைக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

அதிகார பரவலாக்கல் அரசியல் தத்துவத்திற்கு எதிராக செயற்பட்ட வடக்கு ஆளுனரால், வவுனியா...

காதலன், நண்பர்களால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட யுவதி

மாத்தளை மாவட்டம், வில்கமுவ நகரில் தனது காதலனைச் சந்திக்கச் சென்றிருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்