கனடாவின் நோர்த் யோர்க் பொது மருத்துவமனையில் 2023 ஆம் ஆண்டின் முதல் குழந்தை ஜனவரி 1 ஆம் திகதி நள்ளிரவு 12:01 மணிக்கு பிரசவமானது.
தமிழர்களான சௌபர்ணிகா மதியழகன் மற்றும் லோக் மனோகர் தம்பதியினரின் மகனான சஞ்சித் லோக் என்ற குழந்தையே அந்த மருத்துவமனையில் 2023இல் பிறந்த முதல் குழந்தையாகும்.
6 பவுண்டுகள் எடையுள்ள சஞ்சித் லோக் என்ற ஆண் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலை தெரிவித்தது.
15 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையின் பாரம்பரியத்தின்படி, பிறந்த குழந்தையுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல குடும்பத்திற்கு ஒரு போர்வை பரிசாக வழங்கப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்த மருத்துவமனையில் ஒவ்வொரு ஆண்டும் 4,500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிரசவமாகின்றன. கடந்த ஆண்டு 4,663 குழந்தைகள் பிரசவமாகின.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
+1
+1