உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு கோரும் அறிவித்தல் மாவட்ட செயலாளர்கள் ஊடாக இன்று (4) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வேட்புமனுக்கள் கோரும் அறிவிப்பு வெளியிடப்பட்ட 14 நாட்களுக்குப் பிறகு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கு மூன்று முதல் மூன்றரை நாட்கள் வரை கால அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று வெளியாகும் இந்த விளம்பரத்தில் திகதி, இடம், பாதுகாப்பு விவரங்கள், வேட்பாளர்களின் எண்ணிக்கை, பெண்களின் பிரதிநிதித்துவம் போன்றவை இடம்பெற்றுள்ளன.
341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை கோரும் அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திகதி பின்னர் வெளியிடப்படும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.