வீட்டில் இருந்து காணாமல் போன மூன்று பிள்ளைகளின் தந்தையின் சடலம் கெசல்கமுவ ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.
ஒஸ்போன் தோட்டத்தில் வசித்தபொன்னுசாமி மகாலிங்கம் (வயது 73) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து காணாமல் போயிருந்தார் என அவரது உறவினர்கள் நோட்டன்பிரிட்ஜ் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்
இந்த நிலையில், தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள், ஆற்றில் சடலம் மிதப்பதை அவதானித்து, பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
சடலத்தை ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் பரிசோதித்ததன் பின்னர் சடலம் டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1