கல்லுண்டாயில் வாள்வெட்டு!

Date:

இன்றிரவு மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லூண்டாய் வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற வாள்வெட்டில் 34 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வாள்வெட்டிற்கு இலக்கானவரது வீடானது வாள்வெட்டு நடந்த இடத்திற்கு அருகாமையிலேயே காணப்படுகிறது. இந்நிலையில் அவர் வீட்டுக்கு வெளியே வந்து வீதியில் நின்றவேளை முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வாள்வெட்டினை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த நபர் 1990 இலக்க அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்ற “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்” நூல் வெளியீடு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைக்கூட அரங்கில் “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத்...

சவுதியில் கைதாகியுள்ள அனோஜனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முக்கிய பிரதிநிதிகள்

சவுதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள சிவராசா அனோஜன் என்பவரின் குடும்பத்தினரை முக்கிய...

20 ஆண்டுகளின் பின் ஈராக்கிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கப்படை!

ஈராக்கில் உள்ள தங்கள் கடைசித் தளங்களிலிருந்தும் அமெரிக்கப் படைகள் புதன்கிழமைக்குள் வெளியேறத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்