வடமாகாணத்தின் புதிய கல்விப் பணிப்பாளராக யோன் குயின்ரஸ்!

Date:

வட மாகாணத்தின் ஐந்தாவது மாகாண கல்வி பணிப்பாளராக ரி.யோன் குயின்ரஸ் வடமாகாண பிரதம செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

1986 ஆம் ஆண்டு ஆசிரியராக இணைந்து கொண்ட குயின்ரஸ், பாடசாலை அதிபராக அதன் பின் பலாலி ஆசிரிய கலாசாலையின் அதிபராக செயற்பட்டார்.

பின்னர் உதவிக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர், தீவகம், மடு துணுக்காய், கிளிநெச்சி ஆகிய பகுதிகளில் வலயக் கல்விப் பணிப்பாளராகச் செயற்பட்டார்.

பின்னர் 2013 ஆம் ஆண்டு இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் ஒன்று அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.

வடக்கு மாகாண கல்வி அபிவிருத்தி, திட்டமிடல், நிர்வாகம் ஆகிய வற்றின் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளராக பதவி வகித்த நிலையில் தற்போது வட மாகாண கல்வி பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களை குறிவைக்கும் பொலிசார்

குறைபாடுள்ள அல்லது சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களால் ஏற்படும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கும்,...

ஜனக பெரேரா கொலை வழக்கு: ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்!

அனுராதபுரத்தில் 2008-ஆம் ஆண்டு நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஓய்வுபெற்ற மேஜர்...

2000 பேர் பலி: பதற வைக்கும் வெனிசுலா நிலவரம்!

கிட்டத்தட்ட 2,000 பேரைக் கொன்ற இரண்டு பேரழிவுகரமான நிலநடுக்கங்களுக்குப் பிறகு, வெனிசுலாவில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்