26.8 C
Jaffna
December 23, 2024
Pagetamil
உலகம்

ஹிஜாப் அணியாமல் போட்டியில் பங்கேற்ற ஈரான் வீராங்கனை

சர்வதேச செஸ் போட்டியில் ஹிஜாப் அணியாமல் பங்கேற்ற ஈரானிய பெண் வீராங்கனை ஒருவர் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கஜகஸ்தானின் அல்மாட்டியில் நடைபெற்ற சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் 25 வயதான சரசாதத் கதேமல்ஷாரி தலையில் ஹிஜாப் இல்லாமல் காணப்பட்டதை அடுத்து ஈரானின் செஸ் கூட்டமைப்பு புதன்கிழமை கருத்து தெரிவித்தது.

செப்டம்பரில் 22 வயதான மஹ்சா அமினி காவலில் இறந்ததைத் தொடர்ந்து, ஈரானிய ஆட்சிக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவாக சரசாதத் கதேமல்ஷாரி ஹிஜாப் அணியாமல் போட்டியில் பங்கேற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

“இந்த செஸ் வீரர் சுதந்திரமாகவும் தனது சொந்த செலவிலும் பங்கேற்றார்”, ஈரானின் செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஹசன் தாமினி தெரிவித்ததாக, ஃபார்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.

“கதேமல்ஷரீஹ் கூட்டமைப்பு மூலம் இந்தப் போட்டிகளில் பங்கேற்கவில்லை, மாறாக சுதந்திரமாகச் சென்று இந்தச் செயலைச் செய்தார்,” என்று அவர் மேலும் கூறினார்.

ஈரானிய பெண் விளையாட்டு வீராங்கனைகள் சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்கும் போது தலையை மறைப்பது உள்ளிட்ட இஸ்லாமிய சட்டங்களின்படி ஈரானின் கடுமையான ஆடைக் குறியீட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஈரானிய சதுரங்க வீராங்கனைகள் சாரா காடெம், அடௌசா பூர்காஷியன் ஆகியோர் விளையாடும் போது ஹிஜாபை அணிவதில்லை

கதேமல்ஷாரியின் செயலால் தாங்கள் அதிர்ச்சியடைந்ததாக தாமினி கூறினார்.

“இந்த செஸ் வீராங்கனை இதைச் செய்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை, ஏனெனில் அவர் முந்தைய போட்டிகளில் தரத்திற்கு இணங்க பங்கேற்றார்”, என்று தாமினி கூறினார்.

சர்வதேச செஸ் ஃபெடரேஷன் இணையதளத்தின்படி, கதேமல்ஷாரி உலக தரவரிசையில் 804வது இடத்தில் உள்ளார்.

ஹிஜாப் அணியாமல் சர்வதேச போட்டியில் பங்கேற்ற முதல் பெண் தடகள வீராங்கனை இவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் மாதம், ஸ்பீட் ஸ்கேட்டர், நிலோஃபர் மர்தானி, துருக்கியில் நடந்த போட்டியில் தலையில் முக்காடு இல்லாமல் கலந்து கொண்டதற்காக அதிகாரிகளால் தண்டிக்கப்பட்டார்.

மர்தானி “அங்கீகாரம் இல்லாமல்” பங்கேற்றார் என்று விளையாட்டு அமைச்சகம் கூறியது, ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியது.

இதேபோல், அக்டோபரில் சியோலில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் போது மற்றொரு வீராங்கனை எல்னாஸ் ரெகாபி தலையில் பட்டை மட்டுமே அணிந்திருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உகண்டாவை உலுக்கும் டிங்கா டிங்கா வைரஸ்: இந்த வைரஸ் தொற்றினால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டேயிருப்பீர்கள்!

Pagetamil

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

east tamil

பிரான்ஸை உலுக்கிய பாலியல் வல்லுறவு வழக்கு: சொந்த மனைவியை கொடூரமான பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய கணவன், 50 ஆண்களுக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

துரோகம் செய்த காதலி கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை: காதலனுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு!

Pagetamil

12 முறை விவாகரத்து செய்து… இணைந்த தம்பதி: 13வது முறை அரசாங்கமே கடுப்பானது!

Pagetamil

Leave a Comment