துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி, நன்னடத்தை காலத்தில் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 15 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணொருவர் நேற்று முன்தினம் (28) இரவு முச்சக்கரவண்டியைக் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
கர்ப்பிணி சிறுமியையும், கடத்தியவரையும் கைது செய்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தம்புள்ளை – கெக்கிராவ பிரதான வீதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரவு வேளையில் முச்சக்கர வண்டியில் இளைஞன் ஒருவரும் கர்ப்பிணிப் பெண்ணும் பயணிப்பதைக் கண்டுள்ளனர்.
அவர்கள் வழி தெரியாமல் திண்டாடியதால், பொலிசார் அவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், தம்புள்ளை பொலிசார் அவர்கள் இருவரிடமும் தொடர்ச்சியாக விசாரணை நடத்தினார்.
இதன்படி, 15 வயதுடைய இந்த கர்ப்பிணிப் பெண் கஹ்தகஸ்திகிலிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் போது துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் அனுராதபுரம் சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது.
மாணவியை துஷ்பிரயோகம் செய்த நபரே, வைத்தியசாலையிலிருந்து மாணவியை நுட்பமாக கடத்திச் சென்ற வேளையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
15 வயதான கர்ப்பிணிப் பெண் மற்றும் 24 வயதுடைய கடத்தல்காரனிடம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டனர்.
கடந்த 22ஆம் திகதி அநுராதபுரம் வைத்தியசாலையில் இருந்து மாணவி கடத்தப்பட்டு கொழும்பு பகுதியில் உள்ள தற்காலிக விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.