யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இருந்த மருதலிங்கம் பிரதீபன் யாழ். மாவட்ட செயலக பதில் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமையுடன் யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த கணபதிப்பிள்ளை மகேசன் பதவி உயர்வு பெற்று இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளராக செல்கிறார்.
இன் நிலையில் புதிய அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பதில்அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் கடமையாற்றுவார்.
பிரிவுபசார நிகழ்வில் கலந்துகொண்டிருந்தவேளை கணபதிப்பிள்ளை மகேசன் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.




