ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில், மோட்டார் சைக்கிளில் கட்டிப்பிடித்தபடி பயணித்த காதல் ஜோடியின் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அந்த ஜோடி கைது செய்யப்பட்டதாக வியாழக்கிழமை பொலிசார் தெரிவித்தனர்.
இந்த வீடியோ விசாகப்பட்டினத்தின் எஃகு ஆலை சாலையில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, இது காருக்குள் அமர்ந்திருந்த வேறு சிலரால் படமாக்கப்பட்டது.
அந்த பெண் கே ஷைலஜா (19), ஆண் அஜய்குமார் (22) என அடையாளம் காணப்பட்டது.
இந்த விவகாரம் விசாகப்பட்டினம் போலீஸாரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த ஜோடி கைது செய்யப்பட்டனர்.
இருவர் மீதும் அலட்சியமாக வாகனம் ஓட்டிய சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, வாகனத்தை இரும்பு ஆலை போலீஸார் பறிமுதல் செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
போலீசார் மோட்டார் வாகன சட்டம் 336, 279, 132 மற்றும் 129 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இருவரது பெற்றோரும் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
போக்குவரத்து விதிகளை குடிமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடைபிடிப்பது மிகவும் அவசியம் என மாநகர காவல் ஆணையர் சி.எச்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து விதிகளை மீறுவோரின் வாகனங்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
విశాఖలో లవర్స్ ఓవర్ యాక్షన్. స్టీల్ ప్లాంట్ మెయిన్ రోడ్డుపై పట్టపగలు బరితెగింపు. హెల్మెట్ లేకుండా యువకుడు డ్రైవింగ్. కాలేజ్ యూనిఫామ్ ధరించి విద్యార్థిని వికృత చేష్టలు చూసి నివ్వెరపోయిన స్థానికులు. #AndhraPradesh #Visakhapatnam #Vizag pic.twitter.com/i2dGgHKElg
— Vizag News Man (@VizagNewsman) December 29, 2022