பிரதேசசபைகளின் ஊடாக முன்னெடுக்கப்படும் அனைத்து வேலைத்திட்டங்களும்
மக்களின் நலன் கருதியே முன்னெடுக்கப்படுமென நோர்வூட் பிரதேசசபையின்
தலைவர் ரவிகுழந்தைவேல் தெரிவித்துள்ளார்
இன்று (30) வெள்ளிக்கிழமை புளியாவத்தை பகுதியல் புதிதாக நிர்மானிக்கப்பட்ட இலவச ஆயுர்வேத வைத்தியசாலை, சிறுவர் பூங்கா,மற்றும் கனனிபிரிவு ஆகியவற்றை திறந்து
வைத்து மக்கள் மத்தியில் உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் நோர்வூட் பிரதேசசபையின் தலைவர் ரவிகுழந்தைவேல் உட்பட நோர்வூட்
பிரதேசசபையின் உபதலைவர், கிஷோகுமார், நோர்வூட் பிரதேசசபையின்
உறுப்பினர்கலான. அலெக்ஸ்சாண்டர், லிகாந்தன், அருண்குமார், அருள்ஞானம்,
மற்றும் பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் இளங்கோ, சமுர்தி
உத்தியோகத்தர் ஹாரீஸ், நோர்வூட் பொலிஸ்நிலைய பொருப்பதிகாரி என பலரும்
கலந்து கொண்டனர்.
இதன் போது மேலும் கருத்தி தெரிவித்த நோர்வூட் பிரதேசசபை தலைவர் ரவி
குழந்தைவேல்,
நோர்வூட் பிரதேசசபையை எங்களிடம் முதற்கட்டமாக கையளிக்கும்
போது பத்து இலட்சம் ருபாய் பணமும் ழூன்று கோடி ருபாய் கடனும் காணப்பட்டது. இருந்த போதிலும் நோர்வூட் பிரதேசசபையினை இன்று மக்களுக்கு சேவைசெய்ய கூடிய ஒரு சபையாக மாற்றியமைக்க்பட்டுள்ளது. சாஞ்சிமலை பகுதியில் காணப்பட்ட குடி நீர்
பிரச்சினைக்கு நோர்வூட் பிரதேசசபையின் ஊடாகவே தீர்வுகான முடிந்தது.
பிரதேசசபைக்கு வருகின்ற வருமானங்களை வைத்து கொண்டே தான் மக்களுக்கான
சேவையினை முன்னெடுக்க முடியும். முன்பு இயங்கப்பட்ட பிரதேசசபையின் ஊடாக
புதியாவத்தை நகரில் உள்ள மண்டபம் வாடகைக்கு வழங்கபட்டிருந்தது. நாங்கள்
நோர்வூட் சபையை கைபற்றிய பின்பு தான் உபதபால் நிலையம், கிராம
உத்தியோகத்தருக்கான காரியாலயம், சமுர்தி உத்தியோகத்தருக்கான காரியாலம்
என்பவற்றை பெற்று கொடுத்துள்ளோம்.
வீதியையும் வடிகான் அமைப்புகளை மாத்திரம் எதிர்பாரத்து கொண்டு இருக்க கூடாது எந்த விடயத்தினை மக்களுக்கு இலகுவாக கொண்டு முடிவதுதான் ஒரு மக்கள் பிரதி நிதியின் சேவையாகும் என குறிப்பிட்டார்.
-பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்-