இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து இரண்டு நாள் வேலைத்திட்டத்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது நாளாந்தம் 200 முதல் 300 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் படி, இந்த ஆண்டு 75,765 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
சுகாதார அமைச்சு டெங்கு தடுப்பு வேலைத்திட்டங்களின் போது சுகாதார அதிகாரிகள் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் ஆதரவைப் பெற்றாலும், பொதுமக்கள் அதிகப் பங்காற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதைக் குறைக்க முடியும்.
டெங்கு பரவும் இடங்களை அழிப்பதும், அந்தந்த குடியிருப்புகளை அண்மித்த பகுதிகளில் நீர் தேங்கி நிற்கும் பகுதிகளை கண்காணிப்பதும் மக்களின் பொறுப்பாகும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.