24.6 C
Jaffna
January 9, 2025
Pagetamil
கிழக்கு

முதலை இழுத்து சென்றவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிஓடை வண்ணாத்தி ஆற்றில் மீன்பிடிக்க சென்ற போது முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நபரின் சடலம் நேற்று முன்தினம் (28) மாலை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பாலம்வெளி கொடுவாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய சதாசிவம் சிவபாபு என்பவரே இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வண்ணாத்தி ஆற்றில் மீன்பிடிப்பதற்காக கடந்த 26ம் திகதி பகல் இறங்கிய போது அவரை முதலை இழுத்துச் சென்று காணாமல் போயிருந்தார்.

இதனையடுத்து அம்பாறை ஒலுவில் கடற்படையினரின் உதவியுடன் பொலிசார் ஆற்றில் காணாமல் போனவரை தேடி வந்த நிலையில் முதலையால் கை கால்கள் கடிக்கப்பட்ட நிலையில் சடலம் நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டுள்ளது.

பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அம்பாறையில் நல்லிணக்கத்தின் தேசிய தரவுகளைப் பகிரும் பயிற்சி பட்டறை

east tamil

சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தின் புதிய நிர்வாக குழு தெரிவு

east tamil

வெருகலில் நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு – கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

east tamil

லசந்த விக்கிரமதுங்கவின் 16வது நினைவேந்தல் இன்று

east tamil

கிழக்கு மாகாணத்திற்கும் கடவுச்சீட்டு அலுவலகம் வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி வலியுறுத்தல்

east tamil

Leave a Comment