கடலட்டை பண்ணைதான் வேண்டும்: யாழில் போராட்டம்!

Date:

கடல் அட்டைப்பண்ணைகள் வேண்டுமென இன்று வெள்ளிக்கிழமை யாழ் கோட்டை பகுதியில் இருந்து யாழ் பஸ் தரிப்பு நிலையம் வரை பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இந்த பேரணியில் ஈடுபட்டவர்களால் கடற்தொழில் அமைச்சுக்கு மகஜரும் கையளிக்கப்பட்டது.

பேரணிகள் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

கடற்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அட்டை பண்ணைகள் பெரிதும் உதவுகின்றது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் நாட்டுக்கும் மக்களுக்கும் அன்னிய செலாவணியை பெற்றுக் கொடுக்கும் ஒரு தொழிலாக அட்டைப் பண்ணை காணப்படுகின்றது.

சிலர் தமது குறுகிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக கடல் தொழிலும் அட்டப்பண்ணையும் செய்யாதவர்கள் எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

யாழில் முறையான அனுமதிகளை உரிய திணைக்களங்கள் ஊடாக பெற்றே அட்டைப் பண்ணைகளை அமைத்துள்ளோம்.

அட்டைபண்ணைகள் வேண்டுமென பலர் விண்ணப்பித்துள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்த மக்களுக்கு பண்ணைகளைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என்றனர்.

spot_imgspot_img

More like this
Related

சிஐடியினர் அநுராதபுரம் சென்றால் முழு திருடர்களையும் ஒரே மேடையில் பிடித்திருக்கலாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன தலைமையிலான பேரணியையும் ராஜபக்ச குடும்பத்தையும் விமர்சித்த...

வடக்கு, கிழக்கில் மழைக்கு வாய்ப்பு

எதிர்வரும் நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் இடியுடன் கூடிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்