27.5 C
Jaffna
December 22, 2024
Pagetamil
குற்றம்

தந்தையின் பாலியல் கொடுமையை பொறுக்க முடியாத 12 வயது சிறுமி: 12 Km தனியாக நடந்து சென்று பொலிசில் முறைப்பாடு!

இரண்டரை வருடங்களாக தனது தந்தையால் கடுமையான பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கப்பட்ட 12  வயதான மகள், துன்புறுத்தல்களை பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில், 12 கிலோமீற்றர் தூரம் தனியாக நடந்து சென்று கல்நேவ பொலிஸில் நேற்று முன்தினம் (26) முறைப்பாடு செய்ததாக கல்நேவ பொலிசார் தெரிவித்தார்.

பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 35 வயதான கம்பளை பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் இராணுவ சிப்பாய் எனவும், இவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் கல்நேவ பிரதேசத்திற்கு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தை எதிர்கொண்ட சிறுமி 2019இல் பருவமடைந்ததாகவும், அன்றிலிருந்து அன்று முதல் தந்தையால் பல சந்தர்ப்பங்களில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

சுமார் ஐந்து நாட்களுக்கு முன்னர், சிறுமியின் தாய், கம்பளை பகுதிக்கு தேயிலை பறிப்பதற்காக சென்ற போது, ​​சிறுமியை தந்தை  பல தடவைகள் வன்புணர்வு செய்துள்ளார்.

இந்த கொடுமையை பொறுக்க முடியாத சிறுமி, வீட்டிலிருந்து தனியாக புறப்பட்டு பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.

சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர், பொலிஸ் குழுவொன்று உடனடியாக வீட்டிற்குச் சென்றபோது, ​​தந்தை பிரதேசத்தை விட்டு தப்பியோடினார்.

பின்னர் சந்தேக நபர் இப்பலோகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்துங்கமவில் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வடமராட்சியில் 12 சைக்கிள் திருடிய எமகாதகன் கைது!

Pagetamil

குடு சலிந்து பிணையில் விடுதலை!

Pagetamil

வசமாக சிக்கிய ஜோடி!

Pagetamil

யாழில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்!

Pagetamil

போதைப்பொருள் வியாபாரியின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு

Pagetamil

Leave a Comment