26.8 C
Jaffna
December 23, 2024
Pagetamil
இலங்கை

மின் கட்டணத்தை அதிகரித்தால், கட்டணம் செலுத்த முடியாதவர்களின் மின் இணைப்பை துண்டிக்க மாட்டோம்: தொழிற்சங்கம் எச்சரிக்கை!

பொதுமக்கள் நெருக்கடியில் உள்ள இந்த சமயத்தில், மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் விதமாக மின்சாரக் கட்டணத்தை மேலும் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்தால், அதனை ஒட்டுமொத்த மக்களையும் இணைத்து தோற்கடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால்  தெரிவித்தார்.

மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்றும், சட்ட விரோதமாக மின்கட்டணத்தை உயர்த்தினால், கட்டணம் செலுத்த முடியாமல் உள்ள வாடிக்கையாளர்களின் மின் இணைப்பை துண்டிக்காமல் இருக்க தங்கள் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் முடிவு எடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 75% மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவால் சிறிய தொழில் அதிபர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களும் பல கடுமையான பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக ஜெயலால் தெரிவித்தார்.

மின் கட்டணத்தை மீண்டும் ஒருமுறை உயர்த்துவதற்கு அமைச்சரவை கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், ஜனாதிபதியும் மின்சார அமைச்சரும் மக்கள் பிரச்சினைகளில் அக்கறையின்றி செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்களை மேலும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி வேலைநிறுத்தம் செய்ய தாம் தயாரில்லை என்றும், மின்சாரக் கட்டண உயர்வை தோற்கடிக்க அனைத்து மக்களும் ஒன்றிணைந்து, வெகுஜன அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் பலரை ஒன்றிணைத்து அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் ரஞ்சன் ஜெயலால் வலியுறுத்தினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

அடையாள அட்டையின்றி பக்கத்து கடைக்கு சென்றவரை கைது செய்த பொலிசார் இடமாற்றம்!

Pagetamil

தண்டவாளத்தில் செல்பி எடுத்த தாயும், மகளும் ரயில் மோதி பலி

Pagetamil

நாளை முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை

Pagetamil

பிரித்தானியர் ஒருவரால் வந்த வினை: இலங்கையில் பேராபத்தாக உருவெடுத்துள்ள ஆபிரிக்க நத்தைகள்!

Pagetamil

Leave a Comment