26.3 C
Jaffna
December 30, 2024
Pagetamil
விளையாட்டு

100வது டெஸ்ட்டில் இரட்டைச் சதம் விளாசி வோர்னர் சாதனை!

மெல்போர்ன் பொக்சிங் டே டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான இன்று தன் 100வது டெஸ்ட் போட்டியில் ஆடும் டேவிட் வோர்னர் இரட்டைச் சதமெடுத்து ஜோ ரூட் சாதனையை சமன் செய்தார். டெஸ்ட் வரலாற்றில் 100வது டெஸ்ட் போட்டியில் சதம் கண்ட 10வது வீரர் என்ற பெருமையை எட்டினார் டேவிட் வோர்னர். சுமார் 3 ஆண்டுகால சத வறட்சிக்குப் பிறகு தென்னாபிரிக்க பந்து வீச்சு அவரது சதத்துக்கு தண்ணீர் பாய்ச்சியது, விளாசினார் இரட்டைச் சதத்தை.

சென்னையில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் ஜோ ரூட் 218 ரன்களை தன் 100வது டெஸ்ட் போட்டியில் எடுத்த சாதனையை வோர்னர் 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதமடித்து சமன் செய்துள்ளார்.

196 ரன்களில் இருந்த போது இங்கிடி பந்து ஒன்று கூடுதலாக எழும்ப வோர்னரின் கட் ஷாட் எட்ஜ் ஆகி ஒரே ஸ்லிப்புக்கு வைடாகச் சென்று பவுண்டரி சென்றது, 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமெடுத்த முதல் அவுஸ்திரேலிய வீரர் ஆனார். மேலும் இந்த இரட்டைச் சதம் மூலம் பாகிஸ்தான் வீரர் இன்சமாம் 100வது டெஸ்ட் போட்டியில் எடுத்த 184 ரன்களையும் கடந்தார். வோர்னரின் 3வது டெஸ்ட் இரட்டைச் சதம் ஆகும் இது.

வோர்னர் 255 பந்துகளில் 16 பவுண்டரிகள் 2 சிக்சருடன் 200 ரன் எடுத்த நிலையில், காயத்தால் வெளியேறினார்.

ஸ்டீவ் ஸ்மித் 161 பந்துகளில் 9 பவுண்டரி 1 சிக்சருடன் 85 ரன்கள் எடுத்து நார்க்கியா பந்தை தேர்ட் மேனில் அப்பர் கட் அடிக்கும் முயற்சி தோல்வியடைய கல்லியில் டி புருய்னிடம் எளிதாக கட்ச் ஆகி வெளியேறினார். இருவரும் சேர்ந்து சுமார் 56 ஓவர்களில் 239 ரன்களை 3வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். அவுஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் இதுவரை 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்துள்ளது.

வோர்னர் சாதனைத் துளிகள்

தனது 25வது டெஸ்ட் சதத்தின் மூலம் இதே சாதனையைப் புரிந்த எலைட் கிளப்பில் இணைந்தார் வோர்னர். 100வது டெஸ்ட் போட்டியில் சதம் கண்ட, இங்கிலாந்தின் கவுட்ரி, பாகிஸ்தானின் ஜாவேத் மியாண்டட், மே.இ.தீவுகளின் கார்டன் கிரீனிட்ஜ், இங்கிலாந்தின் அலெக்ஸ் ஸ்டூவர்ட், இன்சமாம் உல் ஹக், ரிக்கி பொண்டிங் (100வது டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சத சாதனையை வைத்திருப்பவர் பொண்டிங்), கிரேம் ஸ்மித், ஆம்லா, ஜோ ரூட் வரிசையில் வோர்னரும் இணைந்தார்.

அதே போல் தனது 100வது ஒருநாள், 100வது டெஸ்ட் இரண்டிலும் சதம் கண்ட வகையில் 2வது வீரரானார் வோர்னர். இதே சாதனையை முன்னால் செய்தவர் மே.இ.தீவுகளின் தொடக்க வீரர் கார்டன் கிரீனிட்ஜ்.

இதோடு இந்த இன்னிங்சில் 8,000 டெஸ்ட் ரன்களைக் கடந்த 8வது அவுஸ்திரேலிய வீரர் ஆனார் வோர்னர். இந்தப் போட்டிக்கு முன்பாக தான் பழைய வோர்னராக வருவேன் என்று சூளுரைத்திருந்தார். இப்போது தென்னாபிரிக்கா பந்து வீச்சை சிதறடித்து சொன்னதைச் செய்தார் வோர்னர்.

27 இன்னிங்ஸ்களாக சதமில்லாமல் இருந்த வோர்னர் சத வறட்சியை இன்று போக்கினார்.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்காவை 189 ரன்களுக்கு  சுருண்டது. இப்பொழுது வோர்னரின் இந்த இரட்டைச் சதமும் சேர்ந்து, தென்னாபிரிக்காவின் வெற்றிக்கனவையும் கதவையும் மூடியுள்ளது.

இன்று 32 நொட் அவுட் என்று தொடங்கிய வார்னர் இரட்டைச் சதம் விளாசினார்.

பிரிஸ்பன் கிரீன் டாப்பில் தன்னை கபளீகரம் செய்த ஷார்ட் பிட்ச் எகிறு பந்தை இந்த முறை விடக்கூடாது என்று மாணிக்கமாக இருந்த வோர்னர் மானிக் பாட்சாவாக மாறி புல் ஷாட், ஹூக் ஷாட் என்று பின்னிப் பெடலெடுத்து விட்டார். கட் ஷாட்களும் நேர் ட்ரைவ்களும், கண்கொள்ளாக் காட்சி. ஆனால் ஆன்ரிச் நார்க்கியா இவரை ஆட்டி விட்டார் ஆட்டி. ஒரு ஓவர் முழுதும் மணிக்கு 150 கிமீ தாண்டிய வேகம், ஒரு பந்து 155 கிமீ வேகம், வோர்னர் விரல்களை பதம் பார்த்தது, ஒருமுறை ஹெல்மெட்டில் பட்டது. பிளாஸ்டர் ஒட்ட வேண்டியதாயிற்று. கால்களை அருமையாக நகர்த்தி ட்ரைவ்களாக ஆடி தென்னாபிரிக்காவின் துயரப்புண்ணில் உப்பு தடவினார்.

வோர்னரின் ஃபிட்னெஸ் பிரமாதம் என்பதற்கு சாட்சி 3 முறை 4 ரன்களை ஓடியே அவர் எடுத்தார். என்றாலும், அவரது வேகம் ஒரு கட்டத்தில் விபரீதமாகி, மார்னஸ் லாபுசாக்னேவை தேவையற்ற ரன்அவுட்டில் இழந்தார்.

ரபாடாவை புல் ஷாட்டில் பவுண்டரி எடுத்து சதம் எடுத்தவுடன் அவர் முகத்தில் கண்ட மகிழ்ச்சி அவுஸ்திரேலிய ரசிகர்களின் மனங்களை பிரதிபலிக்கும் மகிழ்ச்சியாகும். 200 ரன்கள் எடுத்து சதைப்பிடிப்பு தீவிரமடைய அவர் பெவிலியன் சென்று விட்டார், கிரீன் இறங்கியுள்ளார் ட்ரவிஸ் ஹெட் இன்னொரு முனையில் ஆடிவருகிறார் ஆஸ்திரேலியா 386/3 என்று 197 ரன்கள் முன்னிலை வகிக்கின்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

21ஆம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்!

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் இந்திய வீரர் அஸ்வின்!

Pagetamil

வெற்றியுடன் டிம் சவுதிக்கு பிரியாவிடை கொடுத்த நியூசிலாந்து!

Pagetamil

Leave a Comment