யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக ஐயப்பன் சுவாமி யானை மீது ஊர்வலமாக கோண்டாவில் ஈழத்து சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு பக்தர்கள் சூழ சென்றார்.
ஹரிஹரசுத சிவாச்சாரியார் தலைமையில் இடம்பெற்ற இவ் ஊர்வலத்தில் பெருந்திரளான ஐயப்பன் பக்த அடியவர்கள் கறுப்பு நிற உடை அணிந்து பக்தி பூர்வமான ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
நல்லூர் ஆலய முன் வீதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலமானது பருத்தித்துறை வீதி ஊடாக ஸ்டான்லி வீதி,கே.கே.எஸ் வீதியினை அடைந்து பலாலி வீதியூடாக கோண்டாவில் ஐயப்பன் ஆலயத்திற்கு ஊர்வலமாக சென்றடைந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1