‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கத்தில் த்ரிஷா முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம், ‘ராங்கி’. வரும் 30ஆம் திகதி வெளியாக இருக்கும் இந்தப் படம்பற்றி த்ரிஷா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
எதுக்கும் பயப்படாத, நினைத்ததை செய்கிற கதாபாத்திரம் என்பதால் ‘ராங்கி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறேன். இயல்பான சண்டைக் காட்சிகளாகத்தான் இருக்கும். இப்போது, நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்கள் அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன. கொரோனாவுக்குப் பிறகு இதுபோன்ற கதைகள் உருவாவது அதிகரித்துள்ளது.
சினிமாவில் ஒவ்வொரு நாளும் புது அனுபவம்தான். நான் அரசியல் கட்சியில் இணையபோவதாக வரும் செய்தியில் உண்மையில்லை. எனக்கும் அரசியலுக்கும்தொடர்பில்லை. இவ்வாறு த்ரிஷா தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1