டுபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்த 19 வயது இளம் பெண் ஒருவர் கரிப்பூர் விமான நிலையத்திற்கு வெளியே கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் காசர்கோட்டைச் சேர்ந்த ஷெஹாலா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
டுபாயில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை உள்ளாடையில் தைத்து மறைத்து வைத்துள்ளார்.
காலை 10:30 மணிக்கு ஷேஹாலா கரிப்பூர் விமான நிலையத்தில் இறங்கினார். சுங்கத்துறை சோதனையில் தங்கம் எதுவும் சிக்கவில்லை. காலை 11 மணிக்கு விமான நிலையத்திற்கு வெளியே வந்தார். அந்த பெண் தங்கம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர்.
போலீசார் அவரது பொதிகளை சோதனை செய்து பல மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது தங்கம் எதுவும் கிடைக்கவில்லை. தான் தங்கம் எதையும் கடத்தி வரவில்லை என போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இளம் பெண்ணின் உடலை பரிசோதித்தனர். அவரது உள்ளாடைக்குள் மூன்று பொட்டலங்களில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது உள்ளாடைக்குள்ளிருந்து 1884 கிராம் தங்கம் மீட்கப்பட்டது. கரிப்பூர் விமான நிலையத்துக்கு வெளியே போலீசாரிடம் சிக்கிய தங்கம் கடத்தல் தொடர்பான 86வது வழக்கு இதுவாகும்.
கண்ணூரைச் சேர்ந்த தங்கக்கடத்தல் கும்பலுடன் இளம் பெண்ணுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
பொலிசார் மேலதிக விசாரணை செய்கிறார்கள்.