25.1 C
Jaffna
January 17, 2025
Pagetamil
உலகம்

ரஷ்யாவின் அணு ஆயுத தாக்குதல் விமான தரிப்பிடத்தில் வெடிப்பு சத்தங்கள்!

ரஷ்யப் படைகள் உக்ரைனில் உள்ள பல நகரங்களின் மீது ரொக்கட் தாக்குதலை நடத்தின. பேச்சுக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்த பின்னர் இந்த தாக்குதல் நடந்தது.

ரஷ்யா ஞாயிற்றுக்கிழமை கார்கிவ் பகுதியில் உள்ள குபியன்ஸ்க் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியது, குபியன்ஸ்க்-லைமன் முன்னணியில் உள்ள 25க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தியது, ஜபோரிஜியாவில் கிட்டத்தட்ட 20 நகரங்களைத் தாக்கியது என்று உக்ரைனின் உயர்மட்ட இராணுவக் கட்டளை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை குபியன்ஸ்க்-லைமன் தொடர்பு வரிசையில் சுமார் 60 உக்ரைனியப் படைவீரர்களைக் கொன்றதாகவும், உக்ரேனிய இராணுவ உபகரணங்களை அழித்ததாகவும் கூறியது.

இதேவேளை, ரஷ்யாவின் ஏங்கெல்ஸ் நகரில் டிசம்பர் 25 அன்று இரவு முழுவதும் வெடிப்புகள் மற்றும் வான்வழித் தாக்குதல் சைரன்கள் பதிவாகியுள்ளதாக உள்ளூர் ரஷ்ய டெலிகிராம் சனல்களை மேற்கோள்காட்டி உக்ரைன்ஸ்கா பிராவ்டா தெரிவித்துள்ளது.

மொஸ்கோவிற்கு தென்கிழக்கே 730 கிலோமீட்டர் தொலைவிலும், உக்ரைனில் இருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலும் ரஷ்யாவின் ஏங்கெல்ஸ் விமான தளம் அமைந்துள்ளது. டிசம்பர் 5 அன்று அந்த இடத்தில் உக்ரைனிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்த முயன்றன. எனினும், ரஷ்யா அவற்றை சுட்டு வீழ்த்தியது.

ஏங்கெல்ஸில் ரஷ்யாவின் Tu-95 நீண்ட தூர அணு ஆயுத குண்டுவீச்சு விமானங்கள் தரித்து நிற்கின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உரிமையாளருக்காக 2 மாதங்கள் காத்திருக்கும் நாய்

Pagetamil

கைதிகள் துணையுடன் உறவு கொள்ள சிறைச்சாலைகளுக்குள் ‘காதல் அறைகள்’: இத்தாலி உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஏற்படும் மாற்றம்!

Pagetamil

இஸ்ரேல் -ஹமாஸ் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது: ஆறு வார காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விவரங்கள்!

Pagetamil

எலான் மஸ்க் வசமாகும் டிக்டொக் செயலி

east tamil

அமெரிக்க பாராளுமன்றத்தில் தமிழ் மாதமாக ஜனவரி

east tamil

Leave a Comment