சுனாமி அனர்த்தம் இடம்பெற்ற இன்றுடன் 18 வருடங்கள் ஆகின்ற நிலையில் தேசிய பாதுகாப்பு தினம் நாடு முழுவதும் அனுஷ்டிக்கப் பட்டுள்ளது.
அதற்கமைய மன்னார் மாவட்டத்திலும் சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றன.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.மன்னார் மாவட்டச் செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஏற்பாடு செய்த சுனாமி நினைவேந்தல் நிகழ்வு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இடம்பெற்றது.
காலை 9.27மணியளவில் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.இதன் போது தீபம் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் சர்வமத தலைவர்கள்,திணைக்களத்தலைர்கள் கலந்து கொண்டனர்.
இதே வேளை மன்னார் கலங்கரை கலை இலக்கிய நற்பனி மன்றத்தின் ஏற்பாட்டில், அதன் இயக்குனர் மோகன்ராஜ் தலைமையில் மன்னார் பிரதான பாலத்தடியில் சுனாமி நினைவேந்தல் இடம் பெற்றது.
இதன் போது சுனாமி அனர்த்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.