நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதலரின் புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல், ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். நடிகர் சூர்யா, கார்த்தி உள்ளிட்டோருடன் நடித்து தமிழில் பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங்.
இவர் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுடன் அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜக்னி பக்னானியை காதலிப்பதாக இன்ஸ்டாகிராமில் ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்திருந்தார். திரிஷா நடிப்பில் வெளியான மோகினி படத்தில் ஜக்னி பக்னானி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜக்னி பக்னானி பிறந்தநாளையொட்டி, இன்ஸ்டாகிராமில் இருவரும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரகுல் ப்ரீத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“சாண்டா எனது வாழ்க்கையின் சிறந்த பரிசைக் கொடுத்துள்ளார். அது நீ தான். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். என் வாழ்வில் மகிழ்ச்சியையும், அமைதியையும் நிரப்பியதற்கு நன்றி. என் அமைதிக்கான காரணமாக இருந்ததற்கு நன்றி. நீ விரும்பும் அனைத்தையும் வெல்ல விரும்புகிறேன். எப்போதும் சிரித்துக் கொண்டே இருங்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.