வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் சிறு பிள்ளையொன்று தவறவிட்ட மோதிரத்தை இரண்டு இளைஞர்கள் மீட்டுக் கொடுத்துள்ளனர்.
வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் இன்று வழிபாட்டிற்கு வந்திருந்த குடும்பமொன்றின் சிறு பிள்ளையொருவர், ஆலய வீதியில் விளையாடிக் கொண்டிருந்த போது, கையில் அணிந்திருந்த பெறுமதியான தங்க மோதிரத்தை தவறவிட்டிருந்தார்.
சற்று தாமதமாக விடயத்தை அறிந்த குடும்பத்தினர் அதை தேட ஆரம்பித்தனர்.
இதை அவதானித்த இரண்டு இளைஞர்களும், அவர்களுடன் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர். சில மணித்தியால தேடுதலின் பின்னர், அந்த இளைஞர்களில் ஒருவர் மோதிரத்தை கண்டெடுத்தார்.
குடும்பத்தினர் வழங்கிய அன்பளிப்பையும் அந்த இளைஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அங்கிருந்தவர்கள் இளைஞர்களை வெகுவாக பாராட்டினர்.