Pagetamil
இலங்கை

இலங்கையின் உண்மையான வடக்கு உச்சியில் பனை முனை திறப்பு!

இலங்கையின் உச்சி என அழைக்கப்படும் ”பனை முனை கல்வெட்டு திறப்பு விழா” பருத்தித்துறை – பனைமுனை பகுதியில் இன்று மதியம் 2.30 மணிக்கு திறந்துவைக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பனை முனை கல்வெட்டினை திறந்துவைத்துள்ளார்.

இதுவரை காலமும் இலங்கையின் தலைப்பகுதியாக பருத்தித்துறை – சக்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இலங்கையின் தேசிய கொடி பொறிக்கப்பட்ட கட்டுமானம் கருதப்பட்டது.

எனினும் அது உண்மையில் தெற்கே தெய்வேந்திரமுனையை நேரே இணைக்கும் முனை அல்ல எனவும், வரலாற்று ரீதியாகவும் பண்டைய வரைபடங்களில் குறிக்கப்பட்டுள்ளவாறும்

உண்மையான இலங்கையின் தலைப்பகுதி(முனை) பருத்தித்துறை ஒரு பனை முனை அடையாள கல்வெட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சக்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முனை போர்காலத்தில் வரலாற்கு குறிப்புகள், பண்டைய வரைபடங்கள் கணக்கில் எடுக்காமல் பாதுகாப்பு தரப்பால் அமைக்கப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

இயக்கத்துக்கு பயந்து உயர் நீதிமன்றம் சென்ற மஹிந்த!

Pagetamil

தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை சாத்தியமா?

Pagetamil

சாரதிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்

east tamil

இந்திய மீனவர் அத்துமீறல்: எதிர்க்கட்சி தமிழ், முஸ்லிம் எம்.பிகளை சந்தித்த மீனவர் பிரதிநிதிகள்!

Pagetamil

Leave a Comment