தாம்பத்திய உறவில் ஈடுபட 26 வருடங்களாக மனைவி அனுமதிக்கவில்லையென தெரிவித்து, கணவன் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
யாழ் மாவட்டத்திலுள்ள நீதிமன்றமொன்றில் இந்த விவகாரத்து வழக்கு அண்மையில் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு இடம்பெற்று வருகிறது.
யாழ்ப்பாண புறநகர் பகுதியொன்றை சேர்ந்த 51 வயதான நபர் ஒருவரே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 28, 25 வயதான அவர்கள் தற்போது, தனியார்துறையில் பணியாற்றி வருவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இளைய மகன் பிறந்த பின்னர், மனைவிக்கும், தனக்குமிடையில் தாம்பத்திய உறவு நிகழவில்லையெனவும், மனைவி அதற்கு இடமளிக்கவில்லையென்றும், மகன்கள் வளர்ந்து வேலைக்கு செல்லும் வரை காத்திருந்ததாகவும், தற்போது அந்த சூழல் ஏற்பட்டுள்ளதையடுத்து, விவாகரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த தம்பதியினர் உளநல ஆலோசனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.