யாழ் மாநகரசபையின் வரவு செலவு திட்டம் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், வரவு செலவு திட்டத்தை எதிர்க்கப் போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஈ.பி.டி.பியும் தெரிவித்துள்ளன.
வரவு செலவு திட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிர்ப்பதாக நேற்றே தகவல் வெளியானது. வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநாகரசபை உறுப்பினர்கள் நேற்று இரவு தீர்மானித்தனர்.
இந்த நிலையில், வரவு செலவு திட்டத்தை எதிர்க்கப் போவதாக ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர், சட்டத்தரணி மு.ரெமீடியஸ் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
தமது கட்சி தலைமையிடமிருந்து இன்றும் உத்தியோகபூர்வ அறிவித்தல் கிடைக்கவில்லையென்றும், எனினும், எதிர்த்து வாக்களிப்பதென்றே ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஈ.பி.டி.பியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் முழுமையாக எதிர்த்தால் யாழ் மாநகரசபை வரவு செலவு திட்டம் தோல்வியடையும்.
இன்று காலை 9.30 மணிக்கு வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும்.