யாழ்ப்பாண மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 7 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
மாநகர சபையின் முதல்வரால் இன்றையதினம் சபையில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு கோரப்பட்ட நிலையில் ஈ.பி.டி.பி வெளிநடப்பு செய்துள்ளதோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஐக்கிய தேசிய கட்சி ஆகியன எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.
கூட்டமைப்பு 15 உறுப்பினர்களும், ஐ.தே.க ஒரு உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்களுமாக 18 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.
மணிவண்ணன் அணியினர் 10 பேரும், ஐ.தே.க ஒரு உறுப்பினருமாக 11 பேர் ஆதரித்து வாக்களித்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஐதேகவின் தலா ஒவ்வொருவரும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் 2 உறுப்பினர்களும், ஈ.பி.டி.பியின் 10 உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவ்ல்லை.