கொட்டகலை நகர பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை

Date:

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முகமாக, பாடசாலைகளை கண்காணிக்கும் வகையில் கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸார் ஒன்றிணைந்து முன்னெடுத்து வரும் போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்றும் நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா பிரதான பொலிஸ் அத்தியட்சகர் புத்தி உடுகமசூரியவின் பணிப்புரையின் பிரகாரம், நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடன் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் இன்றைய தினம் (21) கொட்டகலை நகரப் பாடசாலைகளில் சோதனைகள் நடைபெற்றன.

கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியிலும், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் இந்த போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன.

தனித்தனியாக பாடசாலை மாணவர்களது புத்தகப் பைகள் சோதனை செய்யப்பட்டதுடன், உடைகளும் சோதனை செய்யப்பட்டன.

குறித்த பிரதான பாடசாலைகளின் அதிபர்களின் அனுமதியுடன், கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் போதைப்பொருள் ஒழிப்புபிரிவு குழுவின் பங்குபற்றலுடன் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமையிலான விசேட பொலிஸ் குழுவின் மூலம் மாணவர்கள் சோதனை செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.

spot_imgspot_img

More like this
Related

காதார விழிப்புணர்வில் மதத் தலைவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்: பிராந்திய பணிப்பாளர் தெரிவிப்பு

கல்முனை பிராந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும்,...

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...

மட்டக்களப்பு நீதிமன்றிற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கு 13 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் இடம்பெற்ற 3 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்