நடிகை சமந்தா நடிப்பதில் இருந்து நீண்ட பிரேக் எடுத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது நடிப்பில் ‘யசோதா’ திரைப்படம் அண்மையில் வெளியாகி இருந்தது.
கடந்த ஒக்டோபரில் தனக்கு மையோசைடிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமந்தா தெரிவித்திருந்தார். அதற்கான சிகிச்சையையும் அவர் எடுத்துக் கொண்டு வருகிறார். அதனால், அவர் ‘யசோதா’ பட புரொமோஷனில் கூட நேரடியாக பங்கேற்கவில்லை. இப்போது விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ படத்தில் அவர் நடித்து வருவதாக தெரிகிறது.
இந்தச் சூழலில் தனது உடல் நலனை கருத்தில் கொண்டு நடிப்பதில் இருந்து நீண்ட பிரேக் எடுத்துக்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு ஏற்ற வகையில் அவர் கமிட் ஆகியுள்ள சில இந்தி திரைப்பட படபிடிப்பை தள்ளி வைக்குமாறு தயாரிப்பாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1