Pagetamil
இலங்கை

தினேஷ் ஷாப்டரின் கையடக்க தொலைபேசியிலிருந்து அனுப்பப்பட்ட கடைசி குறுஞ்செய்தி: பொலிசார் தீவிர விசாரணை!

படுகொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டரின் கையடக்க தொலைபேசியில் இருந்து கிரிக்கெட் வர்ணனையாளருக்கு பிரையன் தோமஸிற்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி பற்றி பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொரளை கனத்தை மயானத்திற்குள் தினேஷ் ஷாப்டர் காருக்குள் வைத்து தாக்கப்பட்டு, பிளாஸ்டிக் வயரினால் கை, கழுத்து கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டர் மர்மமான முறையில் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று முன்தினம் (18) இரவு அவரது மனைவியிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பெற்றனர்.

அன்று மாலை ஷாஃப்டரின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்ற பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுவொன்று, கொழும்பு ஃப்ளவர் வீதியில் உள்ள அவரது வீட்டிற்கு இந்த வாக்குமூலங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

தினேஷ் ஷாப்டரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்தும், அவருடன் சந்தேகத்திற்குரிய நிதி பரிவர்த்தனைகளை மேற்கொண்டவர்கள் குறித்தும் மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் கொலை செய்யப்பட்ட மாலையில் நடந்த சந்தேகத்திற்கிடமான நிகழ்வுகள் குறித்து ஷாஃப்டரின் மனைவியிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.

இதற்கிடையில், ஷாஃப்டரின் தொலைபேசியில் வந்த அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து சிஐடியினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஷாஃப்டரின் தொலைபேசியிலிருந்து கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸின் தொலைபேசிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் குறுஞ்செய்தி தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொரளையில் ஷாஃப்டரின் கார் தரித்திருந்த சமயத்தில், ஷாஃப்டரின் தொலைபேசியிலிருந்து வர்ணனையாளர் பிரையன் தோமஸிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில் “நான் உங்களுக்காக காத்திருக்கிறேன்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிரையன் “நான் சந்திக்க விரும்பவில்லை. எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை“ என பதிலனுப்பியுள்ளார்.

இந்த குறுஞ்செய்தி கொல்லப்படுவதற்கு முன் ஷாப்டரால் அனுப்பப்பட்டதா அல்லது பிரையனை சிக்க வைக்க கொலையாளிகளால் அனுப்பப்பட்டதா என்பது இதுவரை தெரிய வரவில்லை.

எவ்வாறாயினும், கொலையாளிகள் விசாரணையை வேறு திசையில் திருப்ப முயற்சித்துள்ளதாக சந்தேகம் இருப்பதாக விசாரணை குழுக்கள் தெரிவிக்கின்றன.

திரு. ஷாஃப்டரின் கொலையில் சந்தேக நபர்கள் எவரும் நேற்று வரை கைது செய்யப்படவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சுண்டிக்குளத்தில் கடற்படையினரால் மர்ம பொருள் மீட்பு

east tamil

கட்டைக்காட்டு பகுதியில் புதிதாக போடப்பட்ட 15 மின் விளக்குகள்

east tamil

பலுகஸ்வெவவில் சிசுவை கொலை செய்த தாய் கைது

east tamil

மன்னார் துப்பாக்கிச்சூட்டு சந்தேகநபருக்கு சிவப்பு எச்சரிக்கை!

Pagetamil

ரயில் சேவைகள் ரத்து: பயணிகள் கடும் சிரமத்தில்

east tamil

Leave a Comment