வரதட்சணை துன்புறுத்தல் வழக்கில் மூத்த கன்னட நடிகை அபிநயாவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அவர் தனது மூத்த சகோதரரின் மனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார்.
தென்னிந்திய நடிகை அபிநயாவுடன், அவரது சகோதரர் ஸ்ரீநிவாஸுக்கு 3 ஆண்டுகளும், மற்றொரு சகோதரர் செல்வராஜுக்கு 2 ஆண்டுகளும், தாய் ஜெயம்மாவுக்கு 5 ஆண்டுகளும் நீதிமன்றம் தண்டனை விதித்தது.
1998 இல், அபிநயாவின் மூத்த சகோதரர் ஸ்ரீனிவாஸ் லட்சுமி தேவியை திருமணம் செய்து கொண்டார். நான்கு வருடங்கள் கழித்து. 2002 ஆம் ஆண்டில், லட்சுமி தேவி தனது மாமி, கணவரின் உடன் பிறப்புக்களால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதாக சந்திரா லே அவுட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
1998 ஆம் ஆண்டு ஸ்ரீனிவாஸ் என்பவரை திருமணம் செய்தபோது அவரது குடும்பத்தினர் ரூ.80,000 ரொக்கம் மற்றும் 250 கிராம் தங்க ஆபரணங்களை வரதட்சணையாக கொடுத்ததாக அவரது புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் அவரை தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றது. பெங்களூரு நகர நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து லட்சுமி தேவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது நீதிமன்றம் லட்சுமி தேவிக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 2 தசாப்தங்களுக்குப் பிறகு தனக்கு நீதி கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
வழக்கு விசாரணையின் போது அபிநயாவின் தந்தை ராமகிருஷ்ணா மற்றும் ஸ்ரீனிவாஸ் உயிரிழந்தனர்.