வட மாகாண கல்வித் திணைக்களத்தின் கணக்கு பிரிவில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் சுமார் 2இலட்சத்துக்கு அதிகமான பணத்தை சுருட்டியமை தெரிய வந்துள்ளது.
குறித்த விடயம் தொடரில் தெரிய வருவது,
மாகாண கல்வித் திணைக்களத்தில் பணியாற்றம் குறித்த உத்தியோகத்தர் ஆசிரியர்களுக்கான சில கொடுப்பனவுகளை வங்கிகளில் வாய்ப்பு செய்யும் உத்தியோகத்தராக செயற்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அவ்வாறு கொடுப்பனவுகளை வைப்பிலிடும் போது உறுதிச் சீட்டுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி பணத்தை கையகப்படுத்தியுள்ளமை தெரிய வந்துள்ளது.
குறித்த விடையம் தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றமை தொடர்பில் அறியத் தரப்பட்டுள்ளது.
குறித்த உத்தியோகத்தரை தற்காலிகமாக இடைநிறுத்தி மேலதிக விசாரணை மேற்கொள்ளதாக தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1