பம்பலப்பிட்டி ஸ்கெல்டன் வீதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டிலிருந்து கைத்துப்பாக்கி மற்றும் மூன்று மில்லியன் ரூபா பெறுமதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பணம் மற்றும் தங்கம் ஆகியன திருடப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீட்டில் இருந்து கைத்துப்பாக்கி, 12 தோட்டாக்கள், மகசீன், 100,000 ரூபா, 6,000 அமெரிக்க டொலர்கள் மற்றும் 10 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கப் பொருட்கள் என்பன திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோடீஸ்வர தொழிலதிபர் மற்றும் பணிப்பெண்கள் இருவரும் வீட்டில் இருந்த போதே இந்த திருட்டு நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1