சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயனை போலீசார் கைது செய்தனர்.
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது சூர்யாதேவி என்ற பெண் அளித்த புகாரின் அடிப்படையில், நாஞ்சில் விஜயன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பல்வேறு சம்மன்கள் அனுப்பப்பட்ட நிலையிலும், நாஞ்சில் விஜயன் விசாரணைக்கு ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் இன்று நடிகர் விஜயனை போலீசார் கைது செய்தனர். தற்போது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வைத்து நாஞ்சில் விஜயனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1