26 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இலங்கை

கனடா அகதிப் பயணம்: வியட்நாமில் தற்கொலை செய்த யாழ் வாசியின் உடல் இலங்கை வந்தடைந்தது!

அண்மையில், கப்பல் மூலம் கனடா செல்ல முற்பட்ட நிலையில் வியட்நாம் நாட்டில் மரணமடைந்த, சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் சற்று முன்னர் விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

தியாகி அறக்கட்டளை முயற்சியாலும் நிதியுதவியாலும் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது நீர் கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரது உடல் விரைவில் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது,

இதேவேளை இறுதிக்கிரியைகள் நாளை (18) ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி கல்வயலில் உள்ள அவரின் வீட்டில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் இலங்கைத் தமிழ் அகதிகள் 303 பேருடன் கனடா நோக்கி பயணித்த மீன்பிடிப் படகு மூழ்கியதையடுத்து, அதில் பயணித்தவர்கள், சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டு கடந்த (08.11.2022) வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் இருவர் தங்களை மீளவும் இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என தெரிவித்து தங்களது உயிரை மாய்த்து கொள்ள முயற்சித்தனர்.

அவர்களில் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான சுந்தரலிங்கம் கிரிதரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இந்த நிலையில், அவரது உடலை இலங்கைக்கு கொண்டு வருவதில் பெரும் சிக்கல் நிலவிய நிலையில் இன்று அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மருதங்கேணி LB Finance ஊழல் சம்பவம் தொடர்பாக ஊழியர்கள் மீது அழுத்தம்!

east tamil

ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

east tamil

தோட்டத் தொழிலாளருக்கு ரூ.2000 அடிப்படை சம்பள உயர்வு கோரிக்கை: மனோ கணேசன் எம்.பி

east tamil

பச்சையரிசி மற்றும் தேங்காய் விலை குறைப்புக்கான கோரிக்கை – இராதாகிருஸ்ணன்

east tamil

நாட்டு நலனுக்காக மாற்றியமைக்கப்பட்ட 77வது சுதந்திர தினம்

east tamil

Leave a Comment