சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூராவத்தை பகுதியில் 37 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 4.5 லீட்டர் கசிப்பு, 40 லீட்டர் கோடா மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பவற்றுடன் கைது செய்யப்பட்டார்.
சுன்னாகம் பொலிஸார் இன்றையதினம் மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமான மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1