25 C
Jaffna
January 30, 2025
Pagetamil
இலங்கை

புதிய காற்றழுத்த தாழ்வு மையம் இலங்கை நோக்கி நகரும்!

தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்று சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று (15) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது படிப்படியாக மேற்கு திசையில் இலங்கை கடற்பகுதியை நோக்கி நகரக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள நாளாந்த வானிலை முன்னறிவிப்பில்-

சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை : மட்டக்களப்பில் இருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையில் இருந்துவீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடல் நிலை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலை வரை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

விடைபெற்றுச்செல்லும் மாவை அண்ணைக்கு அஞ்சலி மரியாதை!

Pagetamil

மாவையின் மறைவுக்கு ஹிஸ்புல்லாஹ் இரங்கல்

Pagetamil

மாவையின் புகழுடலுக்கு தமிழரசு பதில் தலைவர் சீ.வீ.கே அஞ்சலி

Pagetamil

ஹெரோயினுடன் கைதான இருவர் பொலிஸாரிடமிருந்து தப்பியோட்டம்

east tamil

அரிசி இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் முடிவு

east tamil

Leave a Comment